பால் கொள்முதல் விலை உயர்த்த பரிசீலனை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
அதன்பின், அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டி:
ஆவின் மூலம் பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், 30 சதவீதம் விற்பனை அதிகரித்தது. தற்போது 36 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலனையில் வைத்துள்ளோம். உரிய நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.