சென்னை: அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக தமிழ்நாட்டை சேர்ந்த லெனின் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார். இதேபோன்று, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிந்துஜா மற்றும் நிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.