வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த புகாரின் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
Advertisement
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது புகார் மனு அளித்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தன் முன் ஆஜராக வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சம்மன் அனுப்பி திடீரென விசாரணைக்கு அழைத்தது அநீதியாகும். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த புகாரின் மீது உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
Advertisement