ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சி தொடங்கியதில் இருந்து மதுவுக்கு எதிரான பரப்புரை செய்து வருகிறோம். தற்போது கட்சி தொடங்கியுள்ள நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை கள்ளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம் படி, படி என்கின்றனர். இதுபோன்ற கட்சிகள் இளைஞர்களை குடி, குடி என்கின்றனர். இதுபோன்ற அரசியல் கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும். இவ்வாறு தெரிவித்தார்.