கமல், 3 திமுக எம்.பி.க்கள் பதவியேற்பு
இந்த நிலையில்தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் அடிப்படையில் திமுகவை சேர்ந்த மூன்று எம்பிக்கள் அதாவது பி.வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவையில் எம்பிக்களாக நேற்று காலை பதவியேற்று கொண்டனர். இதில் பி.வில்சன் மட்டும் இரண்டாவது முறையாக மாநிலங்களவை எம்பியாக பதவியேற்று கொண்டார். இவர்களுக்கு மாநிலங்களைவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதேபோன்று திமுக கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் நேற்று முதல் முறையாக மாநிலங்களைவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த கமல்ஹாசன் தமிழ் மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். நிறைவாக ‘‘விழுமிய முறையுடன்’ உறுதி கூறுகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோர் வரும் திங்கட்கிழமை எம்பியாக பதவியேற்க உள்ளனர்.