சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: 1999 கார்கில் யுத்தத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஹக்கீமுத்தீன் சேக்கின் குடும்பத்தினரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து காவல்துறையினருடன் சேர்ந்து 30-40 பேர் கொண்ட கும்பல் அராஜகம் புரிந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கிழக்கு புனேவில் உள்ள சந்தன் நகரில் வசித்து வரும் ஹக்கீமுத்தீனின் குடும்பத்தினர், குடியுரிமை சான்று கொடுக்கத் தவறினால், வங்கதேசத்தினர் அல்லது ரோகிங்யா என்று உங்களை அறிவிப்போம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். கார்கில் போரில் நாட்டிற்காக போரிட்டவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண முஸ்லிம்களின் நிலை என்னவாகும். கார்கில் வீரரின் வீட்டில் அத்துமீறி நடந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.