சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி இளைஞர் கவின் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, சாதி - ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. இதுபோன்ற படுகொலைகள் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கிறது. சாதிய ஆணவ படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.