வரும் 13ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் 13ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற உள்ளது. இதில், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement