திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சக்தி நகரில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு நேற்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்பேசியதாவது: மாட்டோடு பேசுகிறேன் என்கின்றனர், அதற்கு அறிவு இருக்கிறது, அதனால் அதனுடன் பேசுகிறேன். என்னை எதிர்த்து போராடும் அளவிற்கு எல்லா கட்சிகளும் வந்துவிட்டது. நான் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தவுடன் சீமான் ஸ்டாலினிடம் பெட்டி வாங்கி விட்டார் என பேசுகின்றனர். ஏன் சீமான் பெட்டி கொடுத்தார் என பேச வேண்டியதுதானே? ஆணவ படுகொலைகளுக்கு கடும் சட்டம் இயற்றினால் தானே பயப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.