முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் எம்பி சந்திப்பு: உடல்நலம் விசாரித்தார்
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எம்பி நேற்று சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். சந்திப்பின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து கமல்ஹாசன் விசாரித்தார். மேலும் அரசியல் நிலவரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கமல்ஹாசன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மக்களின் முதல்வர் அன்பு நண்பர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்கு திரும்பியதில் பெருமகிழ்ச்சி, ஆனந்தமான இந்த உரையாடலின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தது கூடுதல் மகிழ்ச்சி’ என்று கூறி உள்ளார்.