சென்னை: தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் கூட்டம் பனையூரில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நேற்று விஜய் தொடங்கி வைத்தார். உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த அவர் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு சென்று மக்களை சந்தித்துதான் பலரும் தேர்தலை வென்றிருக்கிறார்கள். ‘மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ்’ என அண்ணா சொன்னதைத்தான் இங்கே சொல்ல விரும்புகிறேன். வீதி வீதியாக வீடு வீடாக சென்று குடும்பம் குடும்பமாக மக்களை வெற்றிப் பேரணியில் தமிழ்நாட்டில் இணையுங்கள். அடுத்ததாக மதுரையில் மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என நிறைய இருக்கிறது. மக்களோடு மக்களாகத்தான் இருக்கப்போறோம். நாம இருக்குறோம். நம்ம கூட மக்கள் இருக்காங்க. நல்லதே வெல்லும். நல்லதே நடக்கும். இவ்வாறு விஜய் பேசினார்.