அரசியல் சண்டைக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதா என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி: அரசியல் சண்டைக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதா என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நில ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. நீதிபதிகளின் வாயை கிளறாதீர்கள் என்று ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை விடுத்தார். எங்களது வாயை கிளறினால் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக தனக்கு மராட்டியத்தில் மோசமான நிகழ்வு நடந்தது. நாடு முழுவதும் அரசியல் சண்டைக்கு அமலாக்கத் துறையை பயன்படுத்தி விடாதீர்கள். அரசியல் மோதல் தேர்தல் களத்தில் நடக்கட்டும்; ஏன் அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.