அரசியல் பிரமுகர்கள் மீது 6 ஆண்டில் 132 ஈடி வழக்கு ஒரு வழக்கில் மட்டுமே தீர்ப்பு
இதில் 2020ல் ஒன்று,2023ல் இரண்டு என மொத்தம் மூன்று வழக்குகளில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே 2020ல் தண்டனை அறிவிக்கப்பட்டது. பணமோசடி வழக்குகளில் அமலாக்க இயக்குனரகத்தால் பெறப்பட்ட தண்டனை விகிதம் 93 சதவீதமாக உள்ளது. இதுவரை 1.39 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பறிமாற்ற சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த வருமானத்தின் மதிப்பு தோராயமாக ரூ. 3,725.76 கோடி. முடக்கப்பட்டவை தோராயமாக ரூ. 4,651.68 கோடி. இணைக்கப்பட்ட தொகை தோராயமாக ரூ. 1,31,375 கோடி ஆகும். இவ்வாறு தெரிவித்தார்.
577 மத்தியபடை வீரர்கள் பலி: மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்: கடந்த 5 ஆண்டுகளில் நக்சல் பாதித்த பகுதிகளில் 577 மத்திய படை வீரர்கள் பலியாகி உள்ளனர். சாக்கடையை சுத்தம் செய்த 453 பேர் பலி: இந்தியாவில் உள்ள 766 மாவட்டங்களில் 732 மாவட்டங்கள் கழிவுகளை கையால் சுத்தம் செய்வதிலிருந்து விடுபட்டுவிட்டனர். கடந்த 2014 முதல் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது 453 பேர் இறந்துள்ளனர் என்று ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.