போலந்து செஸ் அரவிந்த் முதலிடம்
போலானிகா ஸ்ட்ரோஜ்: போலந்து நாட்டில் நடந்து வரும் 61வது ரூபின்ஸ்டெய்ன் நினைவு செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று ஆடி வருகின்றனர். நேற்று முதல் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஆடம்ஸ் உடன் மோதிய அரவிந்த் 63வது நகர்த்தலில் அபார வெற்றி பெற்றார். முதல் சுற்று முடிவில், புள்ளிப் பட்டியலில் அரவிந்த் முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து, 2வது சுற்றுப் போட்டியில் ஜெர்மனி வீரர் மாத்தியாஸ் ப்ளுபேமை அவர் எதிர்கொள்ள உள்ளார்.