போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு
சென்னை: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு 7 எதிரிகளை கைது செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைபொருட்களை பறிமுதல் செய்த சென்னை பெருநகர ANIU காவல் குழுவினர் மற்றும் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பரிசுகளை வென்ற காவல் ஆளிநர்களுக்கு, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்துளளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து தனிதிறமையுடன் காவல் துறைக்கு பெருமை சேர்த்து வரும் காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 28.06.2025ம் தேதி ANIU தெற்கு மண்டல காவல் ஆய்வாளர் M.ஜானி செல்லப்பா தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஒருங்கிணைந்து D-1 திருவல்லிகேணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விக்டோரியா தங்கும் விடுதி அருகில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ எடை கொண்ட சூடோஎபிட்ரின் (Pseudoephedrine) என்ற போதை பொருளுடன் 4 எதிரிகளை கைது செய்தனர்.
மேலும் இக்காவல் குழுவினர் 26.07.2025ம் தேதி கிடைத்த தகவலின்பேரில், காவல் துறையினருடன் N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சூடோஎபிட்ரின் (Pseudoephedrine) வைத்திருந்த 3 எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ எடை கொண்ட Pseudoephedrine என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட நடவடிக்கைகளில் சிறப்பாக பணிபுரிந்த ANIU காவல் ஆய்வாளர் (SZ) ஜானி செல்லப்பா, உதவி ஆய்வாளர்கள் மருது, நிர்மல்ராஜ், பொன்பாண்டி, தலைமைக் காவலர் சுந்தரமூர்த்தி, காவலர்கள் ஷேக் முபாரக், பாவேந்தன், ராம்கி, சுரேஷ், பெண் காவலர் பிரியங்கா ஆகியோரின் பாராட்டுக்குரிய பணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் இன்று (05.08.2025) கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் விஜயேந்திர பிதாரி, மேற்கண்ட காவல் அதிகாரிகள், ஆளிநர்களை பாராட்டி வெகுமதி வழங்கி சிறப்பித்தார்கள்.
மேலும், 03.08.2025 அன்று வேளச்சேரியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு, சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை தலைமைக் காவலர் N.செல்வகுமார் 70 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், 85 கிலோ எடை பிரிவில் G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய காவலர் P.மாரிசெல்வம் வெள்ளி பதக்கமும் பெற்று காவல் பணியுடன் உடலை பேணி பாதுகாத்து தமிழக அளவில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் தனித்துவத்துடன் பரிசுகளை பெற்று சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவலர்கள் செல்வகுமார் மற்றும் மாரிசெல்வம் ஆகியோரை சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் தலைமையிடம் விஜயேந்திர பிதாரி இன்று (05.08.20255) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.