தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் அடித்து கொலை: போலீஸ் கண்முன் மக்கள் ஆவேசம், அருணாச்சலில் ஊரடங்கு உத்தரவு

இட்டாநகர்: அருணாச்சலபிரதேசத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்நிலையத்தில் இருந்து இழுத்து சென்று அடித்து கொன்றனர். அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சலபிரதேசத்துக்கு வந்த ஒரு வாலிபர், அங்கு லோயர் திபாங் பள்ளத்தாக்கில் உள்ள ரோயிங் நகரில் பணியாற்றி வந்தார். அந்த நபர் தான் தங்கி இருந்த வீட்டுக்கருகே உள்ள ஒரு பள்ளி விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த 6 முதல் 8 வயதுடைய சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
Advertisement

இதனால் வயிற்று வலி போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து சிறுமிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது பாலியல் பலாத்கார சம்பவம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் காவல்நிலையம் முன் திரண்டனர்.

பின்னர் சிறையில் இருந்த குற்றவாளியை காவலர்கள் கண்முன்னே தர, தரவென வௌியே இழுத்து வந்து கடுமையாக தாக்கினர். இதில் அந்த நபர் உயிரிழந்தார். இதனால் ரோயிங்கில் நிலைமை பதற்றமாக உள்ளது. அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரோயிங் நகரில் கூடுதலாக நான்கு கம்பெனி பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேச உள்துறை அமைச்சர் மாமா நதுங், நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இதுபற்றி விசாரித்தார். மேலும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement

Related News