தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பு..!!
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் தியாகராயர் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டிபஜார், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை, பூக்கடை, புரசைவாக்கம், தியாகராயர் நகரில் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement