தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலை ஏற்க மறுத்ததால் மாணவி மீது துப்பாக்கிச்சூடு: அரியானா வாலிபருக்கு போலீஸ் வலை

பரிதாபாத்: காதலை ஏற்க மறுத்த 17 வயது பள்ளி மாணவியை, இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டத்தின் பல்லப்கர் பகுதியில் ஷியாம் காலனியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், நேற்று மாலை தனது பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜதின் மங்லா என்ற வாலிபர் அந்த மாணவியை வழிமறித்துள்ளார்.

Advertisement

ஜதின், அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாகவும், தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவி அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜதின், தனது பையில் எதையோ மறைத்து வைத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தின் அருகே மாணவிக்காக காத்திருந்தார். அந்த மாணவி தெருவிற்குள் நுழைந்தவுடன், ஜதின் திடீரென துப்பாக்கியை எடுத்து மாணவியை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அவருடன் வந்த இரண்டு மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில், ஒரு குண்டு மாணவியின் தோள்பட்டையிலும், மற்றொரு குண்டு வயிற்றிலும் பாய்ந்தது.

வலியால் துடித்த மாணவி உதவி கேட்டு கதற, ஜதின் தனது பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தோழி, மீண்டும் ஓடிவந்து அவருக்கு உதவினார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், போலீசார் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில், குற்றவாளி பாதிக்கப்பட்ட மாணவிக்கு முன்பே பழக்கமானவர் என்பது தெரியவந்துள்ளது. மாணவியும் குற்றவாளியை அடையாளம் காட்டியுள்ளார். நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்’ என்றனர்.

Advertisement

Related News