ரூ.50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் டீலரை கடத்திய லேடீஸ் கேங் கைது: போலீசார் விசாரணை
மத்திய பிரதேசம்: 18 வயது ரியல் எஸ்டேட் டீலரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய லேடீஸ் கேங் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் சேர்ந்தவர் ராகுல் இவர் ரியல் எஸ்டேட் டீலராக செயல்பட்டு வருகிறார். இவருக்கும் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த கிருத்திகா ஜெயின் என்கிற 18 வயது பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இவர்கள் அடிக்கடி தொலைபேசியிலும், வீடியோ கால் மூலமாகவும் பலமுறை பேசி வந்துள்ளனர். வழக்கத்தில் ராகுல் தசம் மிகவும் வசதியான நபர் என்பதை தெரிந்து கொண்ட கிருத்திகா ஜெயின் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி அவரை நேரில் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். தன்னுடைய சகோதரி ஒருவருக்கு நிலம் பார்க்க வேண்டும் எனவும், அது தொடர்பாக பேச வேண்டும் என கூறி ராகுலை நேரில் வரவழைத்திருக்கிறார்.
இதனை நம்பி காரில் ராகுல் சென்றபோது அங்கே கிருத்திகாவினுடைய பெண் தோழிகள் சிலரும் சேர்ந்து ராகுலை அவருடைய காரிலேயே கடத்தி சென்றிருக்கின்றனர். கரை ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டு பகுதிக்கு கொண்டு சென்று ராகுலை அடித்து துன்புறுத்தி அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். தங்கள் கேட்டபடி பணத்தை தரவில்லை என்றல் தங்களை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளித்து பெயரை கொடுத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
மேலும் ராகுலை அடித்து துன்புறுத்தி அவரது கழுத்திலிருந்து செயின், கையில் போட்டிருந்த தங்க மோதிரம், ரூ.10,000 பணம், ஏடிஎம் கார்டு என அனைத்தையும் அந்த கும்பல் பறித்துள்ளது. இதனை தொடர்ந்து ராகுலுடைய குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். காவல் துறையினர் ரகுலனுடைய மொபைல் போனை அடிப்படையாக கொண்டு அவரை தேடிவந்தனர்.
அப்போது ஒரு இடத்தில் கார் விபத்து ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து ராகுல் வெளியேறி தப்பித்திருக்கிறார். இதனை தொடர்ந்த புகாரின் அடிப்படையில் இந்த கிருத்திகா ஜெயின் தலைமையில் செயல்பட்டு வந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். அந்த ஒட்டுமொத்த கும்பலுக்கும் கிருத்திகா ஜெயின் என்கிற 18 வயது பெண்தான் மூளையாக செயல்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.