தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலைப்பளுவை குறைக்க விஷ ஊசி போட்டு 10 நோயாளிகளை கொன்ற ஆண் நர்ஸ்: ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

 

Advertisement

பெர்லின்: தனது வேலைப்பளுவைக் குறைப்பதற்காக 10 நோயாளிகளைக் கொன்ற ஆண் செவிலியருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஜெர்மனியின் வுயர்செலன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், வலி ​​நிவாரணப் பிரிவில் பணியாற்றி வந்த ஆண் செவிலியர் ஒருவர், 10 நோயாளிகளைக் கொலை செய்ததாகவும், 27 பேரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆக்கன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர் கடந்த 2023 டிசம்பர் முதல் 2024 மே வரையிலான காலகட்டத்தில், இரவுப் பணியின்போது தனது வேலைப்பளுவைக் குறைப்பதற்காக, அதிக கவனிப்பு தேவைப்பட்ட முதிய நோயாளிகளுக்கு மார்பின் மற்றும் சக்திவாய்ந்த மயக்க மருந்துகளை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தி அவர்களைக் கொலை செய்துள்ளார்.

விசாரணையின்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘நோயாளிகளின் மீது எரிச்சலையும், சிறிதும் அனுதாபமற்ற தன்மையையும் வெளிப்படுத்திய இந்த செவிலியர், வாழ்வின் மற்றும் மரணத்தின் அதிபதியாகத் தன்னை நினைத்துக்கொண்டு செயல்பட்டுள்ளார்’ என்று கடுமையாக வாதிட்டார். குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News