பொய்கை அணையிலிருந்து 16 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை!
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி கிராமத்தில் அமைந்துள்ள பொய்கை அணையிலிருந்து, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்ட பாசன நிலங்களுக்கு 18.11.2025 முதல் 03.12.2025 வரை 16 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
Advertisement
இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டங்களில் உள்ள ஆரல்வாய்மொழி, குமாரபுரம் மற்றும் பழவூர் கிராமங்களில் உள்ள 450.24 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Advertisement