போக்சோவில் சிக்கிய ஹெச்எம் டிஸ்மிஸ்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சோழகன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆண்ட்ரூஸ் (55). இவர், கடந்த 4 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. திருவாடானை அனைத்து மகளிர் போலீசார், ஆண்ட்ரூஸ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், போக்சோ வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூசை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இவரது கல்வி சான்றிதழ்களை தகுதி நீக்கம் செய்யவும், கல்வி நிலையங்களுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement