தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசின் "பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்" திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ. 2,000 கோடி நிறுத்தம்!!

டெல்லி : ஒன்றிய அரசின் "பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்" திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ .2,000 கோடி நிறுத்தம் என தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் புதியக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்து மாநில கல்விக்கொள்கைக்கான குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் அண்மையில் வழங்கப்பட்டது. இதனிடையே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய அரசு, பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்' (Pradhan Mantri Schools For Rising India) என்ற திட்டத்தை உருவாக்கியது. கடந்த 2022, செப்டம்பர் மாதம் ஆசிரியர் தினத்தன்று, இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.
Advertisement

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றழைக்கப்படும் அந்தத் திட்டத்தில், 'நாடெங்கும் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நவீன வசதிகள் செய்யப்பட்டு புதியக் கல்விக்கொள்கையின் ஆய்வகங்களாக மாற்றப்படும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், அரசு பள்ளிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து, புதிய கல்வி கொள்கையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்துவதே பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்" திட்டம் ஆகும்.

இந்நிலையில், பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், தமிழகத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது. "பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்" திட்டத்தை ஏற்காததால் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் ரூ .2,000 கோடியை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று, பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது.

Advertisement

Related News