தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4 முறை அழைத்தும் பிரதமர் மோடி பேச மறுத்ததால் டிரம்ப் பதற்றத்தில் இருக்கிறாரா? பரபரப்பு தகவல்கள்

டெல்லி: வர்த்தக வரி தொடர்​பாக பேச அமெரிக்க அதிபர் 4 முறை தொலைபேசி​யில் அழைத்​தும் பிரதமர் மோடி பேச மறுத்​த​தாக ஜெர்​மனி, ஜப்​பான் பத்​திரி​கைகள் செய்தி வெளி​யிட்​டுஉள்​ளன. உலக நாடு​களுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்​தி​யா​வில் இருந்து அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு மொத்​த​மாக 50 சதவீத வரி விதித்தார். இந்த வரி விதிப்பு கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்​துள்​ளது. இந்த வரி விதிப்பு தொடர்​பாக, ‘அமெரிக்​கா​வின் நிர்​பந்​தத்​துக்கு அடிபணிய மாட்​டோம். எவ்​வளவு நெருக்​கடிகள் வந்​தா​லும் இந்​திய விவ​சா​யிகள், சிறு வணிகர்களை பாதிக்​க​விட மாட்​டேன்’ என்று பிரதமர் மோடி கூறினார்.

Advertisement

இந்​நிலை​யில் வரி தொடர்​பாக பிரதமர் மோடி​யிடம் பேச்​சு​வார்த்தை நடத்த கடந்த சில வாரங்​களில் அதிபர் டிரம்ப் 4 முறை தொலைபேசி​யில் அழைத்​த​தாக​வும் பிரதமர் மோடி பேச மறுத்​து​ விட்​ட​தாக​வும் ஜெர்மனியின் பிராங்க்​பர்ட் நகரிலிருந்து வெளிவரும் பிரபல ‘அல்​லெஜிமெய்ன் ஜெய்​டங்’ என்ற பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது. இதே​போல், டிரம்​பிடம் பேச மோடி மறுத்​து ​விட்​ட​தாக ஜப்​பானில் இருந்து வெளிவரும் ‘நிக்கீ ஏசி​யா’ பத்​திரி​கை​யும் செய்தி வெளி​யிட்​டுள்​ளது. இந்த தகவலை உறு​திப்​படுத்த அமெரிக்​கா​வின் வெள்ளை மாளிகை அதி​காரி​கள் மறுத்​து​விட்​டனர். அதே​நேரத்​தில் பத்​திரி​கை​களில் வெளிவந்​துள்ள செய்​தி​களை மறுக்​க​வும் இல்​லை.

இதுகுறித்து இந்​தி​யா​வின் முக்​கிய தூதரக அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, ‘முக்​கிய விவ​காரங்​களில் தொலைபேசி​யில் பேசுவது பிரதமர் மோடி​யின் பாணி இல்​லை” என்​றார். ஒன்றிய அரசு வட்​டாரங்​கள் கூறும்போது, ‘டிரம்​பிடம் பேசி​னால், ஊகங்​களின் அடிப்​படை​யில் தகவல்​கள் திரித்து வெளி​யிடப்​படு​கின்​றன. அதை தவிர்க்க டிரம்​பிடம் பேசுவதை தவிர்த்​திருக்​கலாம். ஏனெனில், இந்​தியா-பாகிஸ்​தான் போரின்போது டிரம்ப் கூறிய கருத்​துகளை மனதில் வைத்து அவரது தொலைபேசி அழைப்பை தவிர்த்​திருக்​கலாம்’ என்​றார். ஆபரேஷன் சிந்​தூரின் போது, இந்​தியா- பாகிஸ்​தான் இடையே அணு ஆ​யுத போராக மாறு​வதாக இருந்​தது.

அதை நான்​தான் தடுத்​தேன் என்றும் சர்​வ​தேச அளவில் 7 போர்​களை நிறுத்தியிருக்​கிறேன் என்​றும் டிரம்ப் கூறி வருகிறார். இந்​நிலை​யில், இந்​தியா- அமெரிக்கா இடையே வர்த்தக வரி தொடர்​பாக மோதல் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், பிரதமர் மோடி பேச மறுத்​துள்​ள​தால், அதிபர் டிரம்ப் கடும் பதற்​ற​மாகி இருப்​ப​தாக கூறப்படு​கிறது.

Advertisement