இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்: பாக்., பயங்கரவாதி எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என பாகிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனிடையே பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால் பாக்., உலக வரைபடத்தில் இருக்காது என கூறிய இந்திய ராணுவ தளபதி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என பாகிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய லஷ்கர்-இ-தொய்பா துணைத்தலைவர் சைபுல்லா; ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மே 10 ஆம் தேதி நாம் செய்து காட்டியதைப் போல் பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அசீம் முனீருக்கு கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.