பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்க சந்தையை தமிழ்நாடு அதிகமாக சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும். அமெரிக்காவின் வரிவிதிப்பு தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை, வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும்