பாமக தலைவர் அன்புமணி தவறான தகவலை பரப்பி வருகிறார் சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசே நடத்த முடியும்: தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிவிப்பு
Advertisement
சென்னை: தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் பொய் சொல்கிறார் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறான தகவல். கர்நாடகாவில் தற்போது நடத்தப்பட்டது சாதிவாரி சர்வே. சாதிவாரி சென்சஸ் (கணக்கெடுப்பு) அல்ல.
ஒன்றிய அரசால் மட்டுமே சாதிவாரி சென்சஸை நடத்த முடியும் என்று அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர்பேரவையில் கொண்டு வந்த தனித்தீர்மானத்திலும், 7வது அட்டவணையை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசால் நடத்தப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் சட்டப்படி நிலையானது என்று தெரிவித்தார். வதந்திகளை நம்பாதீர்.
Advertisement