பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வரமாட்டார் : ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் விஎஸ் கோபு
03:23 PM Aug 08, 2025 IST
சென்னை :பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரமாட்டார் என்று ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் விஎஸ் கோபு தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை என நீதிபதிக்கு கடிதம் வழங்கிடுமாறு ராமதாஸ் கூறிவிட்டதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.