பாமக பிரச்னைக்கு 6 மாதத்தில் தீர்வு: அன்புமணி தகவல்
சேலம்: பாமக தலைவர் அன்புமணி நேற்று, சேலம் செட்டிச்சாவடி குப்பைமேடு, அப்சரா இறக்க திருமணிமுத்தாறு கால்வாயை பார்வையிட்டார். அவரிடம் சேலம் பாமக எம்எல்ஏ அருள் சமூக வலைதளத்தில் வெளியிடும் செய்திகளை எப்படி பார்க்கீறீர்கள் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, `வேறு ஏதாவது நல்ல கேள்வி இருந்தால் கேளுங்கள். சாக்கடையான கேள்வி எல்லாம் கேட்காதீங்க’ என்றார்.
பாமக உட்கட்சி பிரச்னை குறித்த கேள்விக்கு, `எந்த பிரச்னையும் வராது. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கிறது. ஆறு மாதத்திற்குள் பாமகவின் எல்லா பிரச்னைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். அது எந்த பிரச்னையாக இருந்தாலும் சரியாகும். தேர்தல் சம்பந்தமான கேள்விகளுக்கு விரைவில் நான் தெளிவாக பதில் சொல்வேன். முன்கூட்டியே என்னால் எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது சம்பந்தமாக விரைவில் நாங்கள் அறிவிப்போம்’ என்றார்.
