தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறது: தைலாபுரத்தில் ஜி.கே.மணி வேதனை

Advertisement

திண்டிவனம்: கட்சி ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறது என செய்தியாளர்களிடம் வேதனையுடன் பாமக கவுர தலைவர் ஜி.கே.மணி கூறினார். பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க இன்று தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணியிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. பாமக ஒரு பலமான கட்சி. தனித்தன்மையான கட்சி. கொள்கையோடு, லட்சியத்தோடு இருக்க கூடிய கட்சி. ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறோம். இதற்காக நான் வேதனைபடுகிறேன்.

கட்சி ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறது. மறுபடியும் சீராக வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு. இந்த கட்சி வலிமையான கட்சியாக, பலமான கட்சியாக மீண்டு வரவேண்டும். தேர்தலை சந்திக்கப் போகும் நேரத்தில் கட்சி வலிமையாக இருக்க வேண்டும். அதற்காக தீவிரமாக முயற்சி செய்கிறோம் அது சம்பந்தமாகத்தான் ராமதாசை சந்தித்து பேச வந்துள்ளேன். நீங்கள் நிறைய கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில் தான் நான் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை பனையூரில் முக்கிய நிர்வாகிகளை அன்புமணி சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் சூழ்நிலையில் அங்கு செல்லாமல் சமாதானம் செய்வதற்காக ஜி.கே.மணி தைலாபுரம் வந்துள்ளார். அவருடன் முன்னாள் பாமக தலைவர் தீரனும் வந்திருந்தார். தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர், திருவள்ளுவர் முன்னாள் எம்எல்ஏ திருத்தணி ரவிராஜ், அரியலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி ஆகியோரும் தோட்டத்துக்கு வந்துள்ளனர்.

Advertisement