பாமக மாவட்ட செயலாளர் கொலை முயற்சி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி, பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது அரசு அலுவலகத்திற்கு உள்ளே புகுந்த முகமூடி அணிந்த கூலிப்படை கும்பல் அவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதேசமயம் அவரது வாகன ஓட்டுனர் அருண், கட்சி பொறுப்பாளர் களம்பரம் இளையராஜா கூலிப்படையினரால் வெட்டுப்பட்டு காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்களோடு இணைந்து பணியாற்றக் கூடிய மக்கள் பிரதிநிதிக்கு, பொது நலனுக்கு போராட கூடியவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலைமை வேதனை அளிக்கிறது. பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி குறித்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். மேலும் ம.க.ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றும் தொண்டர்களுக்கும் காவல்துறையை கொண்டு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.