தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக அன்புமணிக்கே சொந்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு: ராமதாஸ் அதிர்ச்சி

திண்டிவனம்: பாமக அன்புமணிக்கே சொந்தம் என்று இந்திய தேர்தல் ஆணையம் ராமதாசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதனால் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் காரணமாக அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிய ராமதாஸ் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியையும், இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனையும் நியமித்தார்.

Advertisement

யாருக்கு கட்சி என்பதும், மாம்பழம் சின்னம் யாருக்கு என்பது குறித்தும் இரு தரப்பினருக்கும் கடும் போட்டி இருந்தது. இந்த சூழலில், பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, பீகார் சட்டப்பேரவை தேர்தலை காட்டி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்பு பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடந்த நவம்பர் 11ம் தேதி கடிதம் அனுப்பினார். அதில், அரசியலமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தகுதிவாய்ந்த தலைவராக நான் 30-05-2025 முதல் பதவியேற்றேன். 16-07-1989 அன்று கட்சியை நிறுவிய கட்சியின் நிறுவனர் நான் என்பதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுடன் கட்சியை நடத்தி வருகிறேன்.

பல ஆண்டுகளாக கட்சியின் சின்னமாக மாம்பழம் சின்னத்தை வைத்திருந்ததால் தேர்தல் ஆணையம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை ‘மாம்பழம்’ சின்னத்தை ஒதுக்குவதற்கான வேட்பாளர்களின் ஏ மற்றும் பி படிவங்களில் கையொப்பமிட எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

எனது கட்சி அதன் அங்கீகாரத்தை இழந்ததால், இப்போது அதே சின்னமான மாம்பழத்தை நான் கட்சி தலைவராக உள்ள எனது கட்சியான பாமகவிற்கு ஒதுக்கலாம். அந்த தகவலை எங்கள் அதிகாரப்பூர்வ முகவரி எண். 63, நாட்டு முத்து நாயக்கன் தெரு, சென்னை-600018க்கு, அனுப்புவதன் மூலம் ஜனநாயக நீதியை வழங்க முடியும்’ என கூறியிருந்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் ராமதாசுக்கு பதில் கடிதம் நேற்று முன்தினம் அனுப்பியுள்ளது.

அதில், ‘தேர்தல் ஆணையத்திற்கு 16.9.2025 மற்றும் 17.9.2025, 23.9.2025, 24.9.2025, 8.10.2025, 3.11.2025 மற்றும் 6.11.2025 ஆகிய தேதிகளில் ராமதாஸ் சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்டதாகவும் தற்போது ராமதாஸ் தலைவராக பதவி வகித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் பதிவுகள் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் 1.8.2026 வரை உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிமை கோரலாம்’ என தெரிவித்துள்ளது. இதனால் ராமதாஸ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

* ராமதாஸ் புதிய கட்சி தொடங்குகிறார்

பாமக அன்புமணிக்கே சொந்தம். வேண்டுமென்றால் நீதிமன்றம் சென்று உரிமையை பெற்று கொள்ளுங்கள் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளதால், விரைவில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாமகவை மீட்டெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நீண்ட காலமாகும் என்பதால், ஏற்கனவே திட்டமிட்டப்படி, நெருங்கிய நண்பர் மூலம் ‘ஐயா பாமக’ கட்சியை தொடங்க ராமதாஸ் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* தேர்தல் ஆணையம் முறைகேடு: ஜி.கே.மணி குற்றச்சாட்டு

பா.ம.க ராமதாஸ் பிரிவு எம்எல்ஏ ஜி.கே. மணி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ம.க பொதுக்குழு 2022ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் அன்புமணி தேதியை திருத்தி 2023ம் ஆண்டு பொதுக்குழு நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்தில் மோசடியான ஆவணத்தை தாக்கல் செய்துள்ளார். இந்த போலி ஆவணத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அவருக்கு ஆதரவான உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதற்கு எதிராக நாங்கள் கொடுத்த புகாரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை. தேர்தல் ஆணையமும் சேர்ந்து முறைகேடு செய்துள்ளதாக கருதுகிறோம். நிர்வாக குழு, பொதுக்குழு மருத்துவர் ராமதாசை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அறிவித்திருக்கிறது. இதனை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

பா.ம.க கட்சியை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அன்புமணி செயல்பட்டுள்ளார். பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரின் அழுத்தத்தினால் தான் தேர்தல் ஆணையம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நாங்கள் நம்பவில்லை, அவ்வாறு நினைக்கவும் இல்லை தேர்தல் ஆணையம் தான் முழுக்க முழுக்க முறைகேடு செய்திருக்கிறது. இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.

Advertisement