அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
விழுப்புரம்: அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் எந்த பதிலும் அவர் அளிக்கவில்லை. பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் உண்மையானது என முடிவு செய்யப்பட்டுள்ளதுபாமக தொடங்கியதில் இருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யபப்டுகிறார் என்று கூறினார்.
Advertisement
Advertisement