ராமதாஸ் பங்கேற்காத பாமகவின் முதல் பொதுக்குழு : அன்புமணி தலைமையில் தொடங்கியது!!
12:04 PM Aug 09, 2025 IST
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு தொடங்கியது. ராமாதாஸின் எதிர்ப்புக்கு மத்தியில் அன்புமணி தலைமையில் பொதுக் குழு நடைபெறுகிறது. அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரிய ராமதாஸ் தரப்பு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்ட பேனரில் ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.