பாமக ஒற்றுமையாக இருந்தால் பலம், இல்லாவிட்டால் பலவீனம்தான்: ஜி.கே.மணி பேட்டி
சென்னை: பாமக ஒற்றுமையாக இருந்தால் பலம், இல்லாவிட்டால் பலவீனம்தான் என பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை வந்தது கவலை அளிக்கிறது. ராமதாஸுடன் 45 ஆண்டுகாலமாக பயணித்து வருகிறேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு. பாமகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement