கலவரம் நடந்து 2 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்..!!
Advertisement
மணிப்பூர்: இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றடைந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார். 2023-ல் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இம்பால் நகரிலிருந்து கார் மூலம் காங்லா கோட்டைக்கு செல்லும் மோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.7,300 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்: ரூ.1,200 மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி இம்பால் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisement