பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து பெங்களூருவில் 5 பேர் பலி
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு, வில்சன் கார்டனில் நேற்று முன்தினம் மர்ம பொருள் வெடித்ததில் சிறுவன் உயிரிழந்தான். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மதன்குமார், மனைவி, குழந்தையுடன் பரிதாபமாக பலியானார். பெங்களூரு நகரத் பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் இந்த குடும்பம் வசித்துள்ளது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் பிளாஸ்டிக் மேட் உள்ளிட்டவை விற்பனையும் முதல் தளத்தில் குடோனும் இருந்தது. மூன்றாவது தளத்தில் மதன்குமார் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் தரை தளத்தில் தீப்பிடித்துள்ளது.இதில் மதன்குமார், அவரது மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகள் விகாஷ், மீதேஷ் ஆகியோர் உள்பட 5 பேர் பலியானார்கள்.