விநாயகர் சிலை தயாரிக்க ஒருமுறை பயன்பாடு பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சென்னை: விநாயகர் சிலைகளை தயாரிக்க ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தெர்மாகோளை பபயன்டுத்தக்கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. விநாயகர் சிலை தயாரிப்பு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்ட அறிக்கையில் களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆஃ ப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாக்கோல் மற்றும் கலையற்றுதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்கள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம் மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு சுற்றுச் சுழலுக்குகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலைகளை அழகுபடுத்த, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைபடி கரைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.