தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குதித்து சாலையை கடக்க முடியாதபடி அவிநாசி சாலை முழுவதும் சென்டர் மீடியன் அமைக்க திட்டம்

*விபத்துகளை தடுக்க நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் இந்த ஆண்டு இதுவரை சாலை விபத்துகளில் 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த மாநகர போலீஸ் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, அவினாசி சாலை முழுவதும் குதித்து செல்ல முடியாத வகையில், சென்டர் மீடியன்களை அமைக்க மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாநகரம் தொழிலில் வளர்ச்சியடைந்த அளவிற்கும் உள்கட்டமைப்பில் இன்னும் வளர்ச்சியடையவில்லை. வாகன பெருக்கத்திற்கு ஏற்றவாறு இன்னும் சாலை வசதிகள் இல்லை. இதனால் மாநகரில் விபத்து நடைபெற்று வருகிறது. அதில் விபத்தில் சிக்கி பலியாபவர்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் தான்.

அவைகள் ஒரு புறம் இருந்தாலும், ரோட்டோரம் நடந்து செல்லும் பாதசாரிகளும், குறிப்பாக முதியவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த ஆண்டு திருப்பூர் நகர சாலைகளில் நடந்த விபத்துகளில் 168 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையைக் குறைக்க மாநகர போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் காலாண்டில் மட்டும் நகரில் போக்குவரத்து மீறுபவர்கள் மீது சுமார் 25,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், சாலை விபத்து உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு இதுவரை, நகர சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: மாநகரத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமீபத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஏழு பேரை கைது செய்துள்ளோம்.

கடந்த வாரம் இரண்டு பேர் உயிரிழந்த சாலை விபத்தில் ஒரு லாரி ஓட்டுநர் அலட்சியமாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை. மாநகரத்தில், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அலட்சியமாக உள்ளனர்.

இது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. இந்த ஆண்டு இதுவரை, நகர சாலைகளில் நடந்த சாலை விபத்துகளில் 78 பேர் இறந்துள்ளனர். நடப்பு ஆண்டின் எண்ணிக்கையில் 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதில், சாலைகளை கடக்கும்போது ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்களும் அடங்குவர். எனவே, அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் பாதசாரிகள் குதிப்பதைத்தடுக்க, அவினாசி சாலை முழுவதும் ஒரு சென்டர் மீடியன் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்தாலும் பல இடங்களில் அமைக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளோம். இந்த பணிகள் சில மாதங்களில் தொடங்கும். எதிர்காலத்தில் இந்த யோசனையை நகரத்தின் பிற சாலைகளுக்கும் கொண்டு செல்வோம். மேலும், போக்குவரத்து விதிகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related News