திருட சென்ற இடத்தில் தகராறு வாலிபர் தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்
Advertisement
அப்போது வே பிரிட்ஜில் இருந்த பழைய பொருட்களை உடுமலையை சேர்ந்த ஏழுமலை (42), திருப்பூரை சேர்ந்த சதீஷ் (38), ஜீவா (41) ஆகிய 3 பேரும் திருடிக் கொண்டிருந்தனர். இதில் ஜீவா தப்பி ஓடிவிட்டார். ஏழுமலையை பிடித்து பாண்டி மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கிவிட்டு சென்றனர். சதீஷ் ஒன்றும் தெரியாதது போல அங்கு படுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை அவரது தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில், படுகாயம் அடைந்தவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை வழக்கு பதிந்து ஏழுமலையை கைது செய்தனர்.
Advertisement