தூண் தளம், இருதளம் கொண்ட 10 மீ.வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதிபெற கூடுதல் வசதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: வீடுகட்டும் கட்டட அனுமதியை இணையதளம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் ஒப்புதல் பெறும் திட்டத்தின் மூலம் தூண் தளம் மற்றும் 2 தளம் வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தூண் தளம், இருதளம் கொண்ட 10 மீ.வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதிபெற கூடுதல் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement