3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மேரி ப்ரங்கோ, பிரெட் ராம்ஸ்டெடல் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷகாஹச்சி ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இயற்பியலுக்கான நோபல் பரிசையும் மூன்று விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச் டெவோரெட் மற்றும் ஜான் எம் மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. மின்காந்த சுற்றில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் ஆகியவை குறித்த ஆய்வுக்காக இந்த மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.
இன்று வேதியியலும், நாளை இலக்கியம் குறித்த நோபல் பரிசு பெறும் நபர்கள் அறிவிக்கப்படுவார்கள். வெள்ளியன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வருகிற 13ம் தேதி அறிவிக்கப்படும். நோபல் பரிசு வழங்கும் விழா டிசம்பர் 10ம் தேதி நடைபெறும்.