செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை குப்பையை போல் அள்ளி போடும் மருந்தாளுனர்கள்: எதை எப்போது சாப்பிடுவது என தெரியாமல் விழி பிதுங்கும் நோயாளிகள்
மேல்மருவத்தூர்: செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கண் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, முதியோர் நலன், குழந்தைகள் நலன், பல் மருத்துவம், தோல் நோய்கள் பிரிவு, இருதய பிரிவு மற்றும் அவரச சிகிச்சை பிரிவு, பொதுமருத்துவம் என பல்வேறு மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துமனையில் செங்கல்பட்டு மாவட்டம் மட்டும் அல்லாமல், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் பொரும்பாலானோர் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய பாமரமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு, தனியார் மருத்துவமனைக்கு நிகரான சிகிச்சை உபகரணாங்களும், மருத்துவ சிகிச்சையும் உள்ளன. இதனாலும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில், குறிப்பாக, உள்நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை நர்சுகளும், அவர்களின் உதவியாளர்களும் நோயாளிகளுக்கு நேரடியாக வழங்குகின்றனர். அதனால், அவர்கள் விரைவில் குணமாகி வீடுகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் புறநோயாளிகள் மருத்துவரை பார்த்து அவர் எழுதி கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை வாங்க மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்தகங்களுக்கு செல்கின்றனர். அங்கு மாத்திரைகளை நோயாளிகள் வாங்குகின்றனர். அவர்களுக்கு மருந்தாளுனர்கள் மாத்திரைகளை எப்போது எந்த வேளை சாப்பிட வேண்டும் என சொல்லுவதில்லை. அப்படி சொல்கின்றார்கள் என்றால் அவர்கள் காலை, மதியம் மற்றும் இரவு என மொத்தமாக மாத்திரைகளை வாரி போடுகின்றனர். அப்படி பேடுகின்ற மாத்திரைகள் எப்போது, சாப்பிட வேண்டும் என்று கேட்டால் நோட்டில் அல்லது சிட்டில் எழுதி இருப்பார்கள் என மருந்தாளுனர்கள் கூறிவிடுகின்றனர். மாத கணக்கில் மாத்திரைகள், மருந்து வாங்குபர்களுக்கு தான் நோட்டில் எழுதி இருக்கும் அதை பார்த்து சாப்பிடவும் மருத்துவர்களின் கையெழுத்து புரியாது. இதில், மாத்திரைகளின் பெயர்களும் தெரியாது, புரியாது. என்றோ ஒருநாள் வந்து செல்பவர்களுக்கு சீட்டில் மருத்துவர் எழுதி கொடுத்து இருப்பார், அந்த சீட்டையும் மருந்தகத்தில் வாங்கி விடுகின்றனர். இந்த மாத்திரைகளை எடுத்து வீட்டில் குழப்பத்துடன் தவறாக மாற்றி மாற்றி மாத்திரைகளை போடும்போது, நோய் குணமாகது. பக்க விளைவுகள்தான் அதிகமாகும்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் சென்றார் நோய் குணமாகாது என்ற பேச்சு மக்கள் மத்தியில் எப்போதுமே உள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைகளை சிலர் நாடி செல்கின்றனர். இதற்கு ஏற்றால் போல்தான், அரசு மருத்துவமனைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர் எழுதி கொடுக்கும் மாத்திரைகளில் படித்தவர்களுக்கு என்றார் மார்னிங் என்பதை ‘எம்’ என்றும், நைட் என்பதை ‘என்’ என்றும் மாத்திரையில் எழுதி தருகின்றனர். படிக்காதவர்களுக்கு காலை என்பதை ‘கா’, என்றும், இரவு என்பதை ‘இ’ என்றும் எழுதி தருகின்றனர். இன்றும் ஒருபடி மேல என்று கவர்களில் காலை, இரவு, மார்னிங், நைட் என்று எழுதி கொடுக்கின்றனர். இதனை அரசு மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை. இதனை, பின் பற்றினால் மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடும். அதேநேரத்தில், தனியார் மருத்துவனைகளைபோல் மாத்திரை சாப்பிடும் வேளையை முறையாக நோயாளிகளுக்கு புரியும்படி எழுதி கொடுத்தால் நோயாளிகளுக்கு நோய் தீரும். மருத்துவனைமக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும். நோய்களும் காணாமல் போகும். அதுவே, நோயின்றி மக்கள் வாழ வழிவகுக்கும். இது இந்த மருத்துவமனைக்கு மட்டும் அல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு பொருந்தும்.