முதலில் கேட்ட இடத்தில் பெட்ரோல் பங்க், கால்வாய் உள்ளது: அமுதா ஐஏஎஸ்
சென்னை: த.வெ.க.வினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது என அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். முதலில் அனுமதி கோரிய லைட் அவுஸ் ரவுண்டானா பகுதியில் பெட்ரோல் பங்க், ஆறு அருகில் இருந்தது. இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். 10,000 பேர் பங்கேற்பார்கள் என அனுமதி கேட்டிருந்தனர் த.வெ.க.வினர். 25ம் தேதியே வேலுச்சாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை த.வெ.கவினர் ஏற்றுக் கொண்டனர். 2 நாட்களுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூட்டம் நடத்திய அதே வேலுச்சாமிபுரம்தான் விஜய் கூட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. 10,000 பேர் கேட்டதால் 20,000 பேர் வருவார்கள் எனக் கருதி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வேலுச்சாமிபுரத்தில் வழக்கத்தைவிட கூடுதலான பாதுகாப்பு தவெகவினருக்கு வழங்கப்பட்டது;