இலை கட்சி தலைவருக்கு எதிராக கோபிக்காரர் மூலம் சின்னமம்மி கொடுக்கும் குடைச்சலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டெல்டா இலை கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளார்களாமே?’’ என்று கேள்வியை ஆரம்பித்தார் பீட்டர் மாமா. ‘‘மலராத தாமரையில் இருந்து குக்கர் கட்சி விலகியதால் டெல்டா மாவட்டத்தில் உள்ள இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்களாம்... ஒருவேளை குக்கர் கட்சி தாமரையுடன் கூட்டணியில் இருந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் குறிப்பிட்ட சில...

தாமரை கட்சியின் மாஜி தேசிய செயலாளர் அட்ராசிட்டியால் அலறும் இலை கட்சி நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By MuthuKumar
03 Sep 2025

‘‘இலை கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிக்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சியில் மேற்கு மாவட்டத்தில் கடும் புகைச்சல் எழுந்துள்ளதாம். புதிய மாவட்ட நிர்வாகிக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி சேலம்காரருக்கு கடிதம் எழுதியுள்ளார்களாம்.. அவரை மாற்ற வேண்டும் என்று ஒருமித்த குரலாக...

மாஜி அமைச்சர்களின் மோதலால் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By MuthuKumar
02 Sep 2025

‘‘மாஜி அமைச்சர்களுக்குள் இருந்து வரும் பனிப்போரால் தொண்டர்கள் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ ஆதரவாளர்களுக்கும், தேனிக்காரர் அணியில் இருந்து வந்த மற்றொரு மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாம்.. கட்சியின் நிர்வாகிகளின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தேனிக்காரர் அணியில் இருந்து...

சேலத்துக்காரரின் பயனில்லாத பயணம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

By Suresh
01 Sep 2025

‘‘கைமேல் பலன் கிடைக்குமா என தோழர்கள் கட்சி எதிர்பார்த்துக்கிட்டு இருக்காமே..’’ என்ன விஷயம் எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘கடைக்கோடி மாவட்டத்தில் கோலோச்சி வந்த போராட்டத்துக்கு பெயர் போன தோழர்கள் கட்சி, தற்போது தொய்வான நிலையில் இருக்கிறதாம்.. ஒரு காலத்துல இந்த மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் வரை தோழர்கள் ஆதிக்கம்தான் நிறைஞ்சி இருந்தது.. தொகுதி சீரமைப்பில் இவுங்களுக்கு...

மலராத கட்சியின் மாஜி தலைவர் புது தலைவருக்கு கொடுத்து வரும் குடைச்சலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By MuthuKumar
31 Aug 2025

‘‘கனிமகொள்ைள நடக்குறது தெரிஞ்சும் தெரியாம இருக்குறாங்களாமே அதிகாரிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல கனிம கொள்ளையை தடுக்க காக்கிகள் நடவடிக்கை எடுத்து வர்றாங்க. அவங்களோட சேர்ந்து கனிமவளத்துறையும் ரெய்டு நடத்தி, கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்றாங்க. கைது நடவடிக்கையும் பாயுது. அப்படி இருந்தாலும் காட்டுப்பாடிக்கு பக்கத்துல இருக்குற ஒரு ஊரான கரசத்துல தொடங்கி மங்களத்துல...

நெஞ்சில் நெருப்பை கட்டிக்கிட்டு இருந்த சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Karthik Yash
30 Aug 2025

‘‘அத்துமீறும் வாகனங்களால் யூனியன் வாசிகள் ரொம்பவே அவதிப்படுறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மதுவுக்கு பெயர் போன புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்தபடி இருக்கிறதாம்.. சமீபத்தில் சுற்றுலா பகுதியான படகு குழாம் அருகிலுள்ள பாலத்தில் பைக்கில் வாலிபர் மெதுவாக செல்ல, விதிகளை மீறி அதிவேகமாக வந்த கார் மின்னல் வேகத்தில் வந்து மோத, ஆற்றுக்குள்...

50% வரியால் வர்ற ஓட்டும் வராம போகுமேன்னு கவலைப்படும் மலராத கட்சி நிர்வாகிகளைப் பற்றி சொல்கிறார்: wikiயானந்தா

By Ranjith
29 Aug 2025

‘‘ரெண்டாவது மாநாடு முடிஞ்ச கையோடு பெரும்பாலான மாநில பொறுப்பாளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்தில் நடந்த நடிகர் கட்சியின் மாநாட்டிற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாகனங்களில் வரவேண்டுமென மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துச்சாம்.. வாகன செலவிற்குரிய பணத்தை தருவதாக மாநில பொறுப்பாளர்கள் சொன்னபடி,...

டெல்லி தரும் நெருக்கடியால் தந்தையை சமாதானப்படுத்த அன்பான மகன் படும்பாட்டை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Karthik Yash
28 Aug 2025

‘‘துணை ஜனாதிபதி வேட்பாளர் பற்றி டெல்லி தன்னிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என கடும் கோபத்தில் இருப்பது யாரு..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘துணை ஜனாதிபதி தேர்தலில், கூட்டணி கட்சி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனை தாமரை அறிவிச்சிருக்கு.. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதியான சுதர்சன் ரெட்டியை...

கூட்டம் கூட்ட, கலையாமல் இருக்க இலை நிர்வாகிகள் செய்யும் வேலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Karthik Yash
27 Aug 2025

‘‘காவல் நிலையத்தை கண்டு குற்றவாளிகள்தான் பயந்து ஓடுவாங்க.. ஆனா, இன்ஸ்பெக்டர்களும் தலைதெறிக்க ஓடுறாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமால்சேலம் காவல் நிலையத்துக்கு கடந்த ஆண்டு ெசவன்ஹில்ஸ் என்பவர் இன்ஸ்பெக்டராக வந்து சேர்ந்தார். இவர் ஏற்கனவே சென்னை, கடலூர் காவல் நிலையங்களில் பணிபுரிந்தபோது சிக்கலில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டுதான் இங்கு வந்தாராம்.....

மலராத கட்சியில் நடந்த பூத் கமிட்டி மோசடியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Ranjith
26 Aug 2025

‘‘எந்த போராட்டமாக இருந்தாலும் தனது துணையுடனேயே களத்தில் இறங்கி அதிகாரிகளுடன் மோதுகிறாராமே மாஜி..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் அரசியல் கூத்துகளுக்கு பஞ்சமில்லையாம்.. ஏற்கனவே புல்லட்சாமி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அம்மணிக்கு திடீர் கல்தா கொடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்று திரும்பியதும் விமான நிலையத்தில் தாலிபறிப்பு குறித்து குமுறினாராம்.. ஆனால்...