தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் உரிமையாளரின் மூக்கு துண்டானது: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருவள்ளூர், ஆக.15: பூந்தமல்லி அருகே வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் உரிமையாளரின் மூக்கு துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த காவல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (35), அப்பகுதியில் இவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அங்கு, அதிகளவில் கட்டுமான பொருட்கள் இருப்பதால், மர்ம நபர்கள் கட்டுமான பொருட்களை திருடிச் செல்லாமல் இருப்பதற்காக, தான் வளர்க்கும் 4 நாய்களை புதிய கட்டிடத்தில் கட்டி வைத்து, அந்த நாய்களுக்கு உணவு வைத்து பராமரித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பராமரித்து வந்த நாய் ஒன்று கணேஷ் மீது பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கை, கால்களை கடித்து குதறிய நாய், முகத்தில் பாய்ந்து மூக்கை கடித்து துப்பியது. இதில், அவரது மூக்கின் ஒரு பகுதி துண்டானது. இதில் பலத்த காயமடைந்த கணேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, அப்பகுதியில் வெள்ளவேடு போலீசார் விசாரித்தபோது, வீட்டில் வளர்க்கும் நாய்களை அதன் உரிமையாளர்கள் வெளியே விடாமல் வீட்டின் அறையில் பூட்டி வைத்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, வீட்டில் வளர்க்கப்பட்டது தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய் என்று தெரிவித்தனர்.

Related News