தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெருந்துறை அருகே பயங்கரம்; கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: சடலத்தை முள்புதரில் வீசிய கொடூரம்

ஈரோடு:நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, பெருங்கடம்பனூரை சேர்ந்தவர் தர் (36). இவர், கேட்டரிங் படித்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான பரிமளாவை (34) 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் வேலை தேடி ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காசிபிள்ளாம்பாளையத்திற்கு வந்தனர். தர், அப்பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்தார். பரிமளா, தனியாக ஸ்டூடியோவும், இ- சேவை மையமும் நடத்தி வந்தார்.

Advertisement

அப்போது, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, பெருமாள்பட்டியை சேர்ந்த கார்த்திகேயனுடன் (42) அவருக்கு பழக்கம் ஏற்பட்டுகள்ளக்காதலாக மாறியது.தருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி பணம் கேட்டு பரிமளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 21ம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு பரிமளா மட்டும் சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த தரின் தம்பி புகழேந்தி, ‘அண்ணன் ஏன் வரவில்லை?’ என கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில், முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் வற்புறுத்தி கேட்டபோது, சண்டையில் பிடித்து தள்ளியதில் தர் கீழே விழுந்து இறந்து விட்டதாகவும், அவரது உடலை தனது ஆண் நண்பர் கார்த்திகேயனுடன் சேர்ந்து, பெருந்துறை, வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு புதரில் தூக்கி வீசிவிட்டு வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, புகழேந்தி அளித்த புகாரின்பேரில் பெருந்துறை போலீசார் வழக்குபதிந்து பெருந்துறை, வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள புதரில் கிடந்த தரின் சடலத்தை மீட்டனர். போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவான பரிமளா, கார்த்திகேயன் ஆகியோரை நேற்று முன்தினம் காலை பெருந்துறை, கோவை சாலை, பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் பரிமளா அளித்த வாக்குமூலம் வருமாறு: எனது கணவர் தருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால், சரியாக வேலைக்கு போகாமல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் கார்த்திகேயனுடன் கள்ளக்காதலுக்கு கணவர்இடையூறாக இருந்ததால் நாங்கள் இருவரும் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி, சில நாட்களுக்கு முன்பு காதலன் கார்த்திகேயன், தரை பைக்கில் கூட்டிச்சென்று, முதலிகவுண்டன்வலசு பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத தோட்டத்தில் இருவரும் மது அருந்தினர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார்த்திகேயன் தரை தாக்கி, கீழே தள்ளி, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பின்னர் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு நண்பரின் காரில் வந்து என்னிடம் கூறினார். பின்னர் சடலம் கிடந்த இடத்துக்கு என்னை அழைத்து சென்றார். இருவரும், தரின் சடலத்தை காரில் எடுத்துச்சென்று, பெருந்துறை, வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு தப்பிவிட்டோம். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இருவரையும் பெருந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News