பெரு - மெக்சிகோ இடையே ஆண்டுகால உறவு முறிந்தது.. பின்னணியில் முக்கிய காரணம்!
பெரு: திடீரென நடந்த சம்பவத்தால் மெக்சிகோ உடனான உறவை முறித்து கொண்டது பெரு அரசு. இதனால் பெரு அரசுக்கும், மெக்சிகோவுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சட்ட விரோத ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் விசாரிக்கப்பட்டவரும், தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் பிரதமர் பெட்சி சாவேசுக்கு மெக்சிகோ அடைக்கலம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மெக்சிகோ உடனான உறவை முறித்து கொள்வதாக பெரு அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பெரு வெளியுறவுத்துறை அமைச்சர் எல்மர் ஷியாலர், தலைநகர் லிமாவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் சாவேசுக்கு அடைக்கலம் கொடுத்தது இருநாட்டு நட்புக்கு எதிரான செயல்.
இரு நாடுகளுக்கும் ஏற்கனவே உள்ள பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் மெக்சிகோ உடனான நட்பை முறித்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என கூறினார். அதேபோல இந்த விவகாரம் குறித்து பெரு அரசு அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த 2022ம் ஆண்டு அப்போதைய அதிபராக இருந்தவர் அவசர நிலையை அறிவித்து நாடாளுமன்றத்தை கலைக்க முயன்றார். இந்த சம்பவத்தில் சாவேசு பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சாவேசுவை பாதுகாக்க மெக்சிகோ அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெரு குற்றச்சாட்டியுள்ளது. இதனால் பெரு அரசுக்கும், மெக்சிகோவுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.