நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி
சென்னை: சன்பிக்ச்சர் தயாரிப்பில் ரஜினிகாந்தின் நடிப்பில் நாளை மறுநாள் திரைக்கு வர உள்ள திரைபடம் கூலி. மிகப்பிரமாண்டமாக உருவாயிருக்க கூடிய இப்படத்திற்கு 14 ஆம் தேதி அன்று மட்டும் தமிழ்நாட்டியில் சிறப்பு கட்சிக்கு அனுமதி அளித்து ஆணை என்பது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘கூலி’. ரஜினிகாந்த், ஆமிர் கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்பட பலர் நடிக்கிறார்கள். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்குகிறார். ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’ படங்களின் மாபெரும் வெற்றிகளுக்கு பிறகு ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது.
இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இந்நிலையில் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் திரையிட உள்ளனர். இது உலகம் முழுக்க இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் வருங்கின்ற 14 ஆம் தேதி ஒரு நாள் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. அந்த ஆணை என்பது பிறப்பிக்கப்பட்டுருக்கிறது. இந்த நிலையில் காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்கு உள்ளக ஒரு கூடுதல்கட்சிகளை அதை திரையிடலாம் என்று குறிப்பிடபட்டிருக்கிறது .