தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

“உன் தாடி முளைத்தபோது.. சமூகத்துக்கு மீசை முளைத்தது”: தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம்!!

சென்னை: உன் தாடி முளைத்தபோது சமூகத்துக்கு மீசை முளைத்தது என தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை;

Advertisement

உன் தாடி முளைத்தபோது

சமூகத்துக்கு மீசை முளைத்தது

இருட்டுச் சுவர்

இடியத் தொடங்கியது

கி.மு - கி.பி பழைய கணக்கு

பெ.மு - பெ.பி புதிய கணக்கு

நூற்றாண்டுகளாய்

எங்கள் புலிகள்

ஆடுகளுக்குப்

புல்பறித்துக் கொண்டும்

பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன

நகத்தில் கூர்மையும்

முகத்தில் மீசையும்

உண்டென்பதை

புலிகளுக்கு நீதான்

புலப்படுத்தினாய்

நீறுகளை ஊதி

நெருப்பை அடையாளம்காட்டிய

சுற்றுப்பயணச் சூறாவளி நீ

வர்க்கப் போரின்

இன்னோர் வடிவம்

உன் தர்க்கப்போர்

நீ சொன்ன பிறகுதான்

செருப்புத் தைத்தவன்

கையில் இருந்ததைக்

காலில் அணிந்தான்

நிர்வாணமாய்

நெசவு செய்தவன்

ஆடை சூடினான்

கலப்பையில் எழுதியவன்

காகிதத்தில் எழுதினான்

சூரியன் வந்ததும்

உடுக்கள் என்னும்

வடுக்கள் மறைவதுபோல்

உன் வருகையால்

வெள்ளை அழுக்கு

வெள்ளாவிவைத்து

வெளுக்கப்பட்டது

பழைமைவாதப் பாம்படித்ததும்

ஓலைக் குடிசைகளின்

ஒட்டடை அடித்ததும்

புலம்பும் புராணங்களுக்கெதிராய்ச்

சிலம்பம் சுற்றியதும்

உனது ஒற்றைக் கைத்தடிதான்

மூலக்கூறு பிரித்தால்

கடைசிவரை

தங்கம் தங்கம்தான்

உன் மரணத்தின்

முன் நிமிடம்வரை

நீ பேசும்புயல்தான்; பெரியார்தான்

கருப்பு நிலக்கரி வைரமாகக்

காலம் ஆகும்

கருப்பு வண்ணம் புரிதல்பெற

இன்னும் ஒரு யுகமாகும்

புகழ் வணக்கம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News